திருக்கோவில் நடைதிறப்பு மற்றும் பூஜை கால விபரம்.

காலம்
|
நேரம்
|
பூஜை விபரம்
|
காலை
|
6.00
A.M
|
நடைதிறப்பு
|
காலை
|
8.15 A.M
|
காலை சந்தி பூஜை
|
பகல்
|
12.00
P.M
|
உச்சிகால பூஜை
|
பகல்
|
1.00 P.M
|
நடை சாத்தல்
|
மாலை
|
4.00
P.M
|
நடைதிறப்பு
|
மாலை
|
5.30 P.M
|
சாயரட்சை பூஜை
|
இரவு
|
8.15
P.M
|
அர்த்தஜாம பூசை
|
இரவு
|
9.00 P.M
|
நடை சாத்தல்.
|
நாள் வழிபாடு :
இத்திருக்கோயிலில் தினசரி 4 கால பூசை நடைபெறுகிறது. முற்பகலில் காலசந்தியும், பகலில் உச்சிக்காலப் பூசையும் மாலையில் சாயரட்சை பூசையும் இரவில் இராக்காலப் பூசையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.மாத வழிபாடு :
தமிழ்மாதக் கடைசிச் செவ்வாய் தோறும் மாதாந்திர விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய இரவில் அன்னை முத்தாரம்மன் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள். பௌர்ணமி தோறும் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாட்டில் மகளிர் பெருமளவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுகின்றனர்.
மார்கழி மாதம் தனுர் மாத வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இம்மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலை 5.00 மணிக்குத் தனுர் மாதப்பூசை நடைபெறுகிறது.
ஆண்டு வழிபாடு : சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் வருஷாபிசேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் அபிசேக ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவில் அன்னை திருத்தேரில் திருவீதியுலா எழுந்தருளுகின்றாள்.
தமிழ்ப்புத்தாண்டு (சித்திரை விசு) அன்று சிறப்பு வழிபாடுகளும் அலங்காரத் தீபராதனைகளும் நடைபெறுகின்றன. மற்றும் இரவு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெறும்.