அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை
அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்
குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம்.
உலகுயிர் தழைத்திட மகிடனை வதைத்திட உமையவள் வருகின்றாள்
பலபல வேடம் புனைந்தவர் கூடப் பவனியும் வருகின்றாள்
கலைமகள் மலைமகள் அலைமகளாகிக் காட்சியும் தருகின்றாள்
வேலவன் தாணுவன குலசேகரன்பட்டினம்
அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை
அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரை துதித்திட வாரீரே !
அன்புடையீர்,
முருகப் பெருமான் அருளாட்சி புரியும் செந்திலம்பதி திருச்செந்தூர் அருகில் உள்ள கடற்கரைப் பட்டினமாகிய குலசேகர பட்டினத்தில் முத்தாரம்மன் எனும் பெயர்கொண்டு கருணை பொழிந்து மூவுலகிற்கும் நாயகி ஞானமூர்த்திஸ்வரருடன் காட்சியளிக்கும் அற்புத தெய்வமாம் அன்னை முத்தாரம்மனுக்கு நாளது விளம்பி ஆண்டு ஆடி மாதம் 14-ம் தேதி (30.07.2018) திங்கட்கிழமை முதல் ஆடி 16ம் தேதி (01.08.2018) புதன்கிழமை முடிய நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு கொடைவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழா நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அப்பனுடன் அன்னையின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
தி.ச. ரோஜாலி சுமதா பி.ஏ., பி.எல்., எம்.எல்.,
தக்கார் / உதவி ஆணையர்.
இ.ச.அ.துறை, தூத்துக்குடி
இரா. இராமசுப்ரமணியன் எம்.ஏ., எம்.பி.ஏ., எம். எஸ். சி.
செயல்அலுவலர்
தொலைபேசி - 04639 - 250355
ஆடி கொடைவிழா 2018 அழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய