குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன்
திருக்கோவிலின் தசரா திருவிழாவின் பத்தாம் நாளான இன்று இரவு 12 மணிக்கு
அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூரனை சம்காரம் செய்து
மகிசாசூரமர்த்தினியாக பக்தர்களுக்கு காட்சியளித்தாள். தசரா திருவிழாவின்
முக்கிய நிகழ்ச்சியான இந்த நிகழ்வை காண உலகின் பலபகுதிகளில் இருந்தும் பல
லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற்றனர்.