
குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை 01-10-2016 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சனிக்கிழமை காலை 5 மணிக்கு அலக்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா வந்து காலை 8 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும்.
லட்சக்கணக்காக மக்கள் இன்றைய தினத்தில் காப்பு கட்டி விரதம் இருக்கா தொடங்குவார்கள். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்தத்திருவிழாவில் 10.10.-2016 அன்று விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் இரவு 12 மணிக்கு நடைபெறும். சூரசம்ஹாரத்தை காண லட்ச கணக்கான பக்தர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து அன்னையின் அருள் பெற்று மன நிறைவுடன் செல்கின்றனர்.
தசரா திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும் அதைத் தொடர்ந்து மாலை சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் சப்பரத்தில் பவனி வருவதும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.