குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலின் முதல் திருநாளான இன்று மக்கள் கூட்டம் இதுவரை இல்லாத வகையில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு முத்தாரம்மன் அருள் பெற்றுள்ளனர். வேடம் அணியும் பக்தர்கள் இன்று முதல் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்குவதால் மக்கள் எண்ணிகையும் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் , தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மார்க்கமாக செல்ல போக்குவரத்து வசதியும் அதிகப்படுத்தி இருப்பதால் மக்கள் வெளியூர் செல்வதற்கு உதவியாக இருக்கிறது.