குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. லட்சகணக்கான மக்கள் கூடும் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹார நிகழ்ச்சி வருகிற 22-ந் தேதி நள்ளிரவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிமாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நவராத்திரி விழாதான், தசராவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று முன்னதாக அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதிஉலா தொடர்ந்து காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேர்த்திக் கடன் செலுத்த இருக்கும் பக்தர்கள் காப்புகட்டிவிரதத்தை கடைபிடிக்கின்றனர். மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை களும், பல்வேறு வாக அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. தசரா திருவிழாவைகாண தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இன்று சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடக்கிறது. 2-ம் திருநாள் இரவில் விசுவகர்மேசுவரர் திருக் கோலத்தில் அம்மன் வீதி உலாவும், 3-ம் நாள் இர வில் பார்வதி திருக்கோகோலத்திலும், 5-ம் திருநா எளில் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் திருநாளில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் திருநாளில் ஆனந்தநடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் திருநாளில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் திருநாள் இரவில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளுகிறார். அப்போது கோவில் முக்கிய நிகழ்ச்சியாக மகிசாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் மகிசாசூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
