ஆதிபராசக்தி வடிவமாக குலசேகரபட்டணத்தில் சுயம்புவாக உருவாகி ஞானமூர்த்தீசுவரருடன் ஒரே சந்நிதியில் எழுந்தருளி உலக மக்களின் தாயாக அருள் செய்து வரும் முத்தாரம்மனுக்கு நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது பத்து இரவுகள் (தசரா) திருவிழா ஆகும். இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக அன்னை முத்தாரம்மன் மகிசாசூரமர்த்தினி அவதாரமாக காட்சி தந்து சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி இவ்வாண்டு வரும் 22.10.2015 அன்று இரவு 12.00 மணியளவில் நடைபெறவுள்ளது. பல லட்சம் பக்தர்கள் கூடும் இத்திருவிழாவிற்கு அம்மனின் நினைவுடனும் வழக்கமான உற்சாகத்தோடும் பக்தர்கள் அனைவரும் வருகை தர அன்புடன் வேண்டுகிறோம்.
இத்தகைய மகத்தான திருவிழாவில் வேடம் அணிந்து கலந்து கொள்ளும் பக்தர்கள் உலோகத்தாலான ஆயுதங்களை கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது தவறின் காவல் துறையால் ஆயுதம் பறிமுதல் செய்யப்படுவதுடன் வழக்கும் பதிவு செய்யப்படும்.
இங்குள்ள கடல் பகுதி ஆழமானதாகும் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடும்போது கரையோரமாக பாதுகாப்பாக நீராடும்படியும். கடலில் நீராட செல்லும் பக்தர்கள் கடலுக்குள் நீண்ட தூரம் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவல்துறையால் ஒழுங்குபடுத்தபட்டுள்ளவாறு ஒரு வழிப் பாதையை பின்பற்றி நடந்து கொள்ள திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள்
அனைவரும் அம்மன் பக்தர்களே! எனவே சாதி பெயரில் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிவதையும், பதாகைகள் (பேனர்கள்) மற்றும் கொடிகள் கொண்டுவருவதையும் தவிர்க்க வேண்டும்.
தீச்சட்டிகளை திருக்கோயில் அருகில் அல்லது வழியில் அல்லது கண்ட கண்ட இடங்களில் போடுவதால் விபத்து நேரவும், பிற பக்தர்கள் தீக்காயமடையவும் நேரலாமென்பதால் தீச்சட்டிகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடலுக்கு செல்லும் வழியில் தான் இறக்க வேண்டும்.
கலைக்குழுவினருடன் வரும் தசரா குழுவினர் திருக்கோயிலுக்கு வரும் முன் கலைக் குழுவினரை கலை நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு அனுப்பிவிட்டு பக்தர்கள் மட்டும் அமைதியாக வந்து தரிசனம் செய்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தசரா குழுவினர் திருக்கோயிலுக்கு வரும் போது பிற பக்தர்கட்கு இடையூறு ஏற்படும்படியோ பிறர் மனம் புண்படும் படியோ நடந்து கொள்ள கூடாதென கேட்டுக் கொள்கிறோம். திருக்கோயிலுக்கு வேடமணிந்து வரும் பக்தர்கள் திருக்கோயில் நற்பெயருக்கும், புனிதத்தன்மைக்கும் களங்கம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புவர்கள் உண்டியல் மூலமாகவோ அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரசீது பெற்றுக் கொண்டோதான் செலுத்த வேண்டும். திருக்கோயிலையும் குலசை நகரையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாண்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, கழிப்பிடம், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்கள் மூலம் சுகாதாரப்பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் அதிக எண்ணிக்கையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அதிகமான மக்கள் கூடும் இடங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையினரால் கண்காணிக்கப்படவுள்ளது. எனவே இத்திருவிழா அமைதியாகவும் மகிழ்ச்சியோடும் சிறப்பாகவும்
நடைபெற பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி அருள்தரும் முத்தாரம்மனின் பேரருளை பெற்றுச் செல்ல அன்புடன் வேண்டுகிறோம்.
நடைபெற பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி அருள்தரும் முத்தாரம்மனின் பேரருளை பெற்றுச் செல்ல அன்புடன் வேண்டுகிறோம்.
ரெ.சா.வெங்கடேஷ்,
செயல்அலுவலர்
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரபட்டணம்
செயல்அலுவலர்
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரபட்டணம்