நவராத்திரியில் கொலு வைத்து அன்னையின் அருளை பெறும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இந்த வருடம் முதல் முத்தாரம்மன் கோவில் இணையதளம் வழியாக உங்கள் வீட்டு கொலுவை உலக அளவில் அனைவரும் பார்க்கும்படி செய்யலாம். உங்கள் கொலுவின் புகைப்படம் மற்றும் உங்கள் முகவரி போன்றவற்றை mutharammantemple.org@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி நீங்களும் பங்கேற்கலாம். பங்குபெறும் அனைவருக்கும் பரிசு உண்டு. சிறப்பான கொலு அலங்காரத்திற்கு சிறப்பு பரிசுகளும் உண்டு. நவராத்திரி ஆன்லைன் கொலுபோட்டியை முத்தாரம்மன் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்
.
நவராத்திரி ஆன்லைன் கொலு போட்டி - விதிமுறைகள் :
* உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டியில் பங்கேற்கலாம்.
* உங்கள் பெயர் , இமெயில் , அலைபேசி எண் , முகவரி போன்ற தகவல்களுடன் போட்டியில் பங்குபெற வேண்டும்.
* ஒருவர் எத்தனை கொலு புகைப்படம் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
* ஐப்பசி மாதம் 6-ம் நாள் வெள்ளிக்கிழமை (23.10.2015) அன்று போட்டி நிறைவு பெறும்.
* கொலுபோட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் இணையதளத்தில் வெளியீடப்படும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கொலு புகைப்படங்களும் நம் முத்தாரம்மன் கோவில் இணையதளத்தில் வெளியீடப்படும்.