TRENDING

முத்தாரம்மன் திருக்கோவில் இணையதளம் புதுப்பொழிவுடன் மீண்டும் துவக்கம்.

குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில் இணையதளம் www.mutharammantemple.org  நிர்வாக அதிகாரி ச.கணேசன் அவர்களின் சீரிய முயற்சியால் மீண்டும் புதுப்பொழிவுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் கோவிலின்  ஸ்தல புராணம் முதல்  பூஜை நேரம் , தசரா திருவிழாவின் வரலாறு , புகைப்பட கேலரி , திருவிழா அழைப்பிதழ் என அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.  தசரா திருவிழாவின் அனைத்து சிறப்புகளையும்  உடனுக்கூடன் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளத்திற்கான அனைத்து சேவைகளையும்  KMB நெட்வொர்க்ஸ் சிறப்பாக செய்துள்ளது என அதன் நிர்வாக இயக்குநர் k.முத்துலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முத்தாரம்மன் கோவில் இணையதளம் இன்று நிர்வாக அதிகாரி ச.கணேசன்  அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட போது எடுத்த புகைப்படம் அருகில்  கோவில் அர்ச்சகர் மஹாராஜ பட்டர்  அவர்களின் மகன் ஞான முத்துக்குமாரசிவம் மற்றும் KMB நெட்வொர்க்ஸ் நிர்வாக  இயக்குநர் முத்துலிங்கம் அருகில் உள்ளார்.

 
Back To Top