இறைவன் - அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்
இறைவி – அருள்தரும் முத்தாரம்மன்
சக்திபீடம் - ஏக பீடம்
தீர்த்தம் - கடல் தீர்த்தம் - சமுத்திரம்
ஆகமம் - காமிகா ஆகமம்
இறைவி – அருள்தரும் முத்தாரம்மன்
சக்திபீடம் - ஏக பீடம்
தீர்த்தம் - கடல் தீர்த்தம் - சமுத்திரம்
ஆகமம் - காமிகா ஆகமம்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் மாநகரிலிருந்து கன்னியாகுமரி செல்லூம் கடற்கரை நெடுஞ்சாலையில் திருச்செந்தூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டிணம். என்னும் பேரூரில் கடற்கரைக்கு அருகாமையில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்திருந்து அன்னை முத்தாரம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கும்படி இத்திருத்தலம் அமைந்துள்ளது.
பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் பெருநகராக வளர்ச்சி பெற்றது. எனவே அந்த மாமன்னனின் பெயரால் இவ்வூர் குலசேகரபட்டிணம் எனப் பின்னர் அழைக்கப்படலாயிற்று.

மூர்த்தியின் சிறப்பு :
மூர்த்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்று பொருள் இறைவன் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் நின்று காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறான். இங்கே அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். தற்போது நாம் வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தைக் காணலாம். அது சுயம்புவாகத் தானே தோன்றியது உளி கொண்டு செதுக்காதது.
இந்நகரில் அட்ட காளிகளுக்கும் (எட்டு காளிகள்) ஆலயங்கள் அமைந்துள்ளன. 1.வீரகாளியம்மன் 2.பத்ரகாளியம்மன் 3.கருங்காளியம்மன் 4.முப்புடாரிஅம்மன் 5.முத்தாரம்மன் 6.உச்சினிமாகாளியம்மன் 7.மூன்று முகம் கொண்ட அம்மன் 8.வண்டி மறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த அட்டகாளிகளின் முதன்மையானதாகச் சிறந்து விளங்கும் தாய் முத்தாரம்மனாகும். இந்த அம்மனைத் தரிசித்து வந்தால் தரித்திரங்கள் விலகி அனைத்து நலன்களையும் பெறுவர்.