TRENDING

தசரா பெரும் திருவிழா - 2016

2016-ம் ஆண்டு தசரா பெரும் திருவிழா கொடியேற்றம் வரும் புரட்டாசி மாதம் 15-ம் தேதி 01.10.2016 சனிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறும்.

மகிசாசூர சம்காரம் - புரட்டாசி மாதம் 24-ம் தேதி 10.10.2016 திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு நடைபெறும்.

முத்தாரம்மன் கோவில் ஆடி கொடைவிழா புகைப்பட கேலரி !

அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் ஆடிகொடைவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்தும் தங்கள் பக்தியை முத்தாரம்மனுக்கு செலுத்தினர்.


முத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ்


அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்,  குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம்.

உலகுயிர் தழைத்திட மகிடனை வதைத்திட உமையவள் வருகின்றாள்
பலபல வேடம் புனைந்தவர் கூடப் பவனியும் வருகின்றாள்
கலைமகள் மலைமகள் அலைமகளாகிக் காட்சியும் தருகின்றாள்
வேலவன் தாணுவன குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரை துதித்திட வாரீரே !


அன்புடையீர்.
முருகப் பெருமான் அருளாட்சி புரியும் செந்திலம்பதி திருச்செந்தூர் அருகில் உள்ள கடற்கரைப்பட்டினமாகிய குலசேகரபட்டினத்தில் முத்தாரம்மன் எனும் பெயர்கொண்டு கருணை பொழிந்து மூவுலகிற்கும் நாயகி அப்பனுடன் காட்சியளிக்கும் அற்புத தெய்வமாம் அன்னை முத்தாரம்மனுக்கு நாளது துன்முகி ஆண்டு ஆடி மாதம் 17-ம் தேதி (01.08.2016) திங்கட்கிழமை முதல் ஆடி 19ம் தேதி (03.08.2016) புதன்கிழமை முடிய நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு கொடைவிழா நடைபெற உள்ளது. இவ்விழா நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அப்பனுடன் அன்னையின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

மொ. அன்னக்கொடி,  எம்.ஏ.பி.எல்.எம்.பி.ஏ.
தக்கார் உதவி ஆணையர் (கூபொ)
இ.ச.அ.துறை,தூத்துக்குடி

 இரா. இராமசுப்ரமணியன்
 நிர்வாக அதிகாரி
தொலைபேசி- 04639-250355
திருக்கோயில் நிர்வாகம்

அழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

புதுவருடத்தில் முத்தாரம்மனுக்கு 1008 பால்குடம் - புகைப்பட கேலரி.

ஆங்கில வருடத்தின் தொடக்கமான இன்று உலக மக்கள் நலனுக்காகவும் , எல்லா வளமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியும் முத்தாரம்மனுக்கு பொதுமக்கள் 1008 பால்குடம் எடுத்தனர் இதன் சிறப்பு புகைப்பட கேலரி.

புதுவருடத்தில் முத்தாரம்மனுக்கு 1008 பால்குடம் மற்றும் 1008 திருவிளக்கு பூஜை.எல்லாம் வல்ல முத்தார அம்பிகையின் திருவருளால் உலக நலன் வேண்டியும், அன்பும் ஆன்மீகமும் வளர வேண்டியும் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டியும் குலசை அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில்  1-1-2016, வெள்ளிக்கிழமை அன்று காலை 1008 பால்குடம் மற்றும் மாலை 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலே இருக்கும் படத்தை சொடுக்கி முழுமையான நிகழ்சிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

திருக்கோயிலின் கட்டுமான பணிகளைச் செய்ய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு !

அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர்
திருக்கோயில் குலசேகரன்பட்டினம் - திருச்செந்தூர் வட்டம்
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

https://drive.google.com/file/d/0B_whBhSSpFsqOEYtV2tIOE0xSUJFdlB4LVNHZVpFZVJEZlRN/view?usp=sharing

மேற்படி திருக்கோயிலின் கீழ் காணும்  கட்டுமான பணிகளைச்  செய்ய தமிழ்நாடு  அரசு  பொதுப் பணித்துறை  மற்றும்  நெடுஞ்சாலைத்துறையில்  பதிவு பெற்ற  தகுதி  வாய் ந்த  ஒப் பந் ததாரர்களிடமிருந்து  மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்  வரவேற்கப் படுகின்றன.  ஒப்பந்தப்புள்ளி  படிவம் குலசேகரபட்டணம்  அருள்தரும்  முத்தாரம்மன்  திருக்கோயில்  செயல்  அலுவலர் அலுவலத்தில்,  03.12.2015    மாலை  6.00 மணி  வரை  அலுவலக  வேலை நாட்களில்  பெற்றுக்கொள்ளலாம்.  மூடி முத்திரையிடப்பட்ட  ஒப்பந்தப் புள்ளிகள்  04.12.2015  பகல்  3.00  மணி  வரை  பெற்றுக்கொள்ளப்படும்.  அன்றையதினம் பிற்பகல்  3.30  மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள்  இந்து  சமயஅறநிலையத்துறை அலுவலர்கள்  முன்னிலையில்  செயல்அலுவலர்  அலுவலகத்தில்  வைத்து  திறந்து நிபந்தனைகளுக்குட்பட்டு முடிவு செய்யப்படும்.

தசரா திருவிழாவின் பத்தாம் நாள் சிம்ம வாகனத்தில் அம்மன் சூரசம்ஹாரம் செய்தல் !

தசரா திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (22-10-2015) ஐப்பசி 5-ம் நாள் இரவு 11.50 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பட்டு மகிஷாசூரமர்த்தினியாக சூரனை வதம் செய்த நேரடி வீடியோ காட்சி.


சூரசம்ஹாரம் நேரலை

தசரா ஒன்பதாம் நாள் வீடியோ தொகுப்பு !


தசரா திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (21-10-2015) ஐப்பசி 4-ம் நாள் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்கதர்களுக்கு காட்சி அளித்த வீடியோ தொகுப்பு.


தசரா திருவிழாவின் ஒன்பதாம் நாள் அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா !

தசரா திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (21-10-2015) ஐப்பசி 4-ம் நாள் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்கதர்களுக்கு காட்சி அளித்த புகைப்பட கேலரி.

 
Back To Top